உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மமிதா பைஜூவின் 'ஹலோ டியர்' ஜனவரி 29ல் வெளியீடு

மமிதா பைஜூவின் 'ஹலோ டியர்' ஜனவரி 29ல் வெளியீடு


மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, தற்போது தென்னிந்திய அளவில் ரசிகர்களால் விரும்பப்படும் மிகப்பெரிய நடிகையாக மாறிவிட்டார் மமிதா பைஜூ. அதிலும் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து 100 கோடி வசூலிக்கும் ஹிட் படங்களின் நாயகியாகவும் தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த நிலையில், மமிதா பைஜூ நடித்துள்ள 'ஹலோ டியர்' திரைப்படம் வரும் ஜனவரி 29ம் தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'பிரேமலு' படத்தில் மமிதாவின் நண்பராக நடித்தவரும், சமீபத்தில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தில் நிவின்பாலியின் தம்பியாக நடித்தவருமான நகைச்சுவை நடிகர் சங்கீத் பிரதாப் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மெட்ரோபாலிடன் சிட்டி பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், இன்றைய தலைமுறையினரின் உறவுகள் மற்றும் அவர்களின் பார்வையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்ட போஸ்டரில் ஒரு ஹலோ என்பது ஆரம்பம் மட்டுமே; உண்மையான மேஜிக் அதற்குப் பிறகுதான் தொடங்கும் என டேக்லைன் குறிப்பிடப்பட்டுள்ளது. தினாய் பவுலோஸ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !