அரசன் படத்தில் பிரியங்கா மோகன்?
ADDED : 209 days ago
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் 'அரசன்' படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விக்ராந்த், யோகலஷ்மி, மாஸ்டர் கமலேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். நேற்று இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த படத்தில் கதாநாயகி யார் என்பது அறிவிக்கவில்லை.
சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சில நாட்கள் பிரியங்கா மோகன் நடித்த காட்சிகளை வெற்றிமாறன் பார்த்த பிறகு தான் இவர் இந்த படத்தில் தொடர்ந்து நடிப்பாரா என்பது உறுதியாகும் என்கிறார்கள்.