உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்யாவின் 40வது படம் டிசம்பர் 4ல் ரிலீஸ்

ஆர்யாவின் 40வது படம் டிசம்பர் 4ல் ரிலீஸ்

'பிரணய விலாசம்' என்ற மலையாளப் படத்தின் மூலம் புகழ்பெற்ற நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஹலோ காதல்'. கதாநாயகனாக ஆர்யா நடிக்கும் 40வது படமாகும். இதில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இயக்குநர் ஹலிதா ஷமீம் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படம் வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. தற்போது இப்படம் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து தங்களது தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பிள் சார்பில், கிஷோர் டி. உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சிறிய இடைவெளிக்கு பிறகு ஆர்யா நடித்துள்ள முழுநீள காதல் படமாக இது உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !