பிளாஷ்பேக்: வில்லுப்பாட்டில் சொல்லப்பட்ட கதை
ஒரு தனிமனிதரோ அல்லது படத்தில் வரும் கேரக்டரோ, அல்லது ஒரு குழுவோ கதையை சொல்ல சொல்ல அது காட்சிகளாக விரிவடையும் பாணி பிற்காலத்தில் வளர்ந்தது.
ஆனால் தமிழ் சினிமாவில் இந்த பாணியை ஆரம்பித்து வைத்தது மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம், அவர் இயக்கி தயாரித்த 'தலைகொடுத்தான் தம்பி' என்ற படத்தில் வில்லுப்பாட்டு கலைஞர்கள் கதை சொல்ல சொல்ல அது காட்சிகளாக விரிவடையும்.
வழக்கமான ராஜா ராணி கதை தான் என்றாலும் அதில் வில்லுப்பாட்டு கலைஞர்கள் மிக நேர்த்தியாக தங்கள் கலைநயத்தோடு சொல்ல பின்னர் அது காட்சிகளாக விரிவடையும்.
இந்த படத்தில் எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், மாலினி, தாம்பரம் லலிதா, 'குலதெய்வம்' வி.ஆர்.ராஜகோபால், டி.பி.முத்துலட்சுமி, டி.கே.ராமச்சந்திரன், கே.வி.சீனிவாசன், பி.எஸ்.ஞானம், கே.வி.பதி.எம்.சாந்தி, 'பேபி' உமா, வி, ஆர்.எம்.மணி. சந்தானம், கரிகோல் ராஜு, டி.கே.சம்பங்கி, சி.பி.கிட்டான், ராஜவேலன், எம்.ஏ.கணபதி, என்.எஸ். நாராயண பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.
ஒரு சாதாரண மனிதன் ஒரு இளவரசி காதலிப்பதால் வரும் பிரச்னைகளை சொன்ன படம்.