உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவாகும் சல்மான் கானின் மான் வேட்டை

சினிமாவாகும் சல்மான் கானின் மான் வேட்டை


1998ம் ஆண்டு 'ஹம் சாத் சாத் ஹெயின்' என்ற படத்தில் நடித்தார் சல்மான் கான். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது 2 அரியவகை மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த சைப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தனது தண்டனை எதிர்த்து சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சல்மான்கானின் மான் வேட்டையையும் அதன் பின் நடந்த போலீஸ் நடவடிக்கைகள், வழக்கு நடவடிக்கைகளை மையமாக வைத்து 'காலா ஹிரன்' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. படம் குறித்து அதன் தயாரிப்பாளர் அமித் ஜானி கூறுகையில், யாருக்கும் ஆதரவாகவோ, அல்லது புண்படுத்தும் நோக்கத்திலோ இப்படம் எடுக்கப்படவில்லை. இது பல வருடங்களாக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் வரலாற்று சிறப்புமிக்க வழக்கின் உண்மையான பக்கங்களை, மக்களுக்கு காட்டும் முயற்சி மட்டுமே என்றார்.

வழக்கு நடந்து வரும் நிலையில் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தை நாட சல்மான் கான் தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !