வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமலின் கேரக்டர்
ADDED : 1119 days ago
2006ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் வேட்டையாடு விளையாடு. தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ள கவுதம் மேனன் அந்த படத்தின் ஆடியோ விழாவின் போது வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதையை ஜெயமோகன் எழுதி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் அப்படம் குறித்து ஒரு பேட்டியில் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில் ‛‛வேட்டையாடு விளையாடு'' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த கமல்ஹாசன் இந்த இரண்டாம் பாகத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார். ஓய்வு பெற்றுள்ள அவரை மீண்டும் ஒரு வழக்கில் ஆஜராவதற்கு காவல்துறை அழைப்பு விடுத்ததை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்வதற்காக அவர் மீண்டும் களத்தில் இறங்குகிறார். இதுதான் படத்தின் ஒன் லைன் என கூறியுள்ளார் ஜெயமோகன்.