‛பிரின்ஸ்' ரிலீஸ் எப்போது : பக்காவாக தியேட்டர்களில் களமிறக்கும் படக்குழு
ADDED : 1225 days ago
டான் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‛பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன.
இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்., 21ம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகிறது. தீபாவளி பண்டிகை அக்., 24ம் தேதி திங்கள் அன்று வருகிறது. அக்., 21ல் படத்தை ரிலீஸ் செய்தால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் வசூலை அள்ளிவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்த படத்தை அன்றைய தினம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.