வெப்சீரிஸில் களமிறங்கும் இலியானா
ADDED : 1118 days ago
தமிழில் கேடி, நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்தவர் இலியானா. ஆனால் தெலுங்கு, ஹிந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இடையில் சில காலம் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தவர் உடல் பெருத்து போனார். பின்னர் எடையை குறைத்து ஸிலிம் ஆனவர் மீண்டும் படங்களில் நடிக்கிறார். தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
இந்நிலையில் முதன்முறையாக வெப்சீரிஸ் ஒன்றில் இவர் நடிக்க உள்ளார். ஹிந்தியில் எடுக்கப்பட உள்ள இந்த தொடரில் இவர் தான் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் வெப்சீரிஸ் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இலியானா நடிக்க உள்ள முதல் வெப்சீரிஸ் இதுவாகும்.