உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ்

லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ்


தமிழ் வெப் சீரிஸ்கள் தற்போது அதிக அளவில் தயாராகி வருகிறது. படங்களை விட வெப் சீரிஸ்களை வாங்குவதில் ஓடிடி தளங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் சிறிய பட்ஜெட்டில் வெப் சீரிஸ்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த வரிசையில் வருகிற 13ம் தேதி பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் 'லோக்கல் டைம்ஸ்'.

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ளனர். 7 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கி உள்ளார். பேன்பாய் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் கூறும்போது “வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழைப் பின்னணியாகக் கொண்டது. ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான, ஒரு காலத்தில் பெருமை பெற்ற பிராந்திய பத்திரிகையான 'நம்ம செய்திக் பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் போராடுகின்றனர்.

இந்த நால்வரின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு பலமான எதிரி ஆகியவற்றைச் சுற்றி இத்தொடரின் கதை நகர்கிறது. உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !