உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ்

கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ்


ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்துள்ள படம் 'கொலைச்சேவல்'. அறிமுக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் இயக்கியுள்ளார். கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் இவர்களுடன் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசை அமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் துதிவாணன் கூறும்போது “காதல் படமான இது, சமுதாயத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் இமையம் எழுதிய 'கொலைச்சேவல்' கதைக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு இல்லை. இத்தலைப்பு படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், அவரிடம் அனுமதி வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார். படம் வருகிற 13ம் தேதி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !