உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல்

கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல்


'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இப்போது பிரியங்கா மோகன் நடிக்கும் 'மேட் இன் கொரியா' படத்தை இயக்கியுள்ளார். நெட்பிளிக்சில் நாளை மறுநாள் இது வெளியாகிறது. இது குறித்து ரா.கார்த்திக்கு கூறுகையில் ''கொரியாவுக்கு செல்லும் ஒரு தமிழ் பெண்ணின் கதை என்பதால் தென் கொரியா சென்று ஒன்றரை மாதங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கே உள்ள பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அவர்கள் வாரத்துக்கு 52 மணி நேரம் மட்டுமே நடிப்பார்கள். அது அந்த நாட்டு சட்டம். அதற்கேற்ப திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தினோம்.

கொரியாவில் ஆங்கிலம் அதிகம் தெரியாது. ஆகவே, ஆப் மூலமாக அவர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுத்தோம். எங்கள் குழுவில் கொரிய மொழி, ஆங்கிலம் தெரிந்த ஒருவரையும் துணைக்கு வைத்துக்கொண்டோம். கொரிய தலைநகர் சியோலில் இந்திய சாப்பாடு கிடைத்தாலும், நான் கொரிய உணவுகளை அதிகம் ரசித்தேன். இந்த படம் 14 மொழிகளில் வருகிறது. 35 மொழிகளில் டப் ஆகிறது. ஓடிடியில் வருவதால் இது சாத்தியம்.

பிரியங்கா மோகன் நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார். அங்கே காலநிலை, மழை, பனி, வெயில் என மாறிக்கொண்டே இருந்தாலும், ஓய்வு நேரத்தில் கூட நடித்துக்கொடுத்தார். தமிழகத்தில், இந்தியாவில் கொரியன் படங்கள், கொரியன் நாடங்கள், கொரியா பாடல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்துக்கும், கொரியாவுக்கும் அந்த காலத்திலேயே நல்ல தொடர்பு இருக்கிறது. மேட் இன் கொரியா ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும். கொரிய நாடங்கள் மீது காதல் கொண்ட என் மனைவியின் பாதிப்பால் இந்த கதை உருவானது. படப்பிடிப்பின்போது கொரியா நடிகர்களுக்கு 'தளபதி' படத்தில் இடம் பெற்ற 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலை நாங்கள் கற்றுக்கொடுத்தோம். அவர்களும் ரசித்து பாடினார்கள்.'' இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !