மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1084 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1084 days ago
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பின்னர் ரச்சிதா மஹாலெட்சுமி கலர்ஸ் தமிழின் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார். ஹிந்தி சீரியலின் ரீமேக்கான இந்த தொடரில் ரச்சிதாவுக்கு ஜோடியாக சீரியல் நடிகர் விஷ்ணு இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே இந்த தொடரானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வெறும் 140 எபிசோடுகளை மட்டுமே கடந்துள்ள இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறுதிக்கட்டத்தை நோக்கி என்ற டேக் லைனுடன் புரோமோ ஒன்றும் சமீபத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து 'சீரியலை முடிக்க வேண்டாம்' என கூறி வருகின்றனர். ஆனால், சீரியல் முடியப்போவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் இந்த புரோமோவானது அர்ஜூனின் திருமண எபிசோடு குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் யுக்தி என்றே சின்னத்திரை வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
1084 days ago
1084 days ago