உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தமிழில் காயத்ரி

மீண்டும் தமிழில் காயத்ரி

பாலிவுட் படங்களில் நடித்து வருகிறவர் காயத்ரி ஐயர். கேரளாவை சேர்ந்த இவர் அறிமுகமானது ஷர்வனா என்ற கன்னட படத்தில் அதன்பிறகு தெலுங்கில் சிக்ஸ் படத்தில் நடித்தார். தமிழில் நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடித்தார், கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு மியாவ் என்ற படத்தில் நடித்தார். தற்போது பருந்தாகுது ஊர்குருவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் விவேக் பிரசன்னா ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் நிஷாந்த் ரூசோ, வினோத் சாகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஞ்சித் உன்னி இசை அமைக்கிறார், அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். தனபாலன் கோவிந்தராஜ் இயக்குகிறார். வெவ்வேறு திசையில் இருந்து வந்து காட்டுக்குள் மாட்டிக் கொள்கிற நான்கு பேர் பற்றிய கதை. த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !