'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ்
'நான் யார் தெரியுமா' என்ற படத்தை இயக்கிய வி.எஸ். பாலமுருகன், அடுத்ததாக இயக்கி வரும் புதிய படம் 'டென்ஷன்'. இப்படத்திற்கு கின்னஸ் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் இ.ஜே. நவ்சாத் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கெனவே 25 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ஆர்.கே.வரதராஜ்.
ஆர்.கே. வரதராஜ் குறித்து இயக்குனர் வி.எஸ். பாலமுருகன் கூறுகையில், ''ஆர்.கே. வரதராஜ் இதுவரை வில்லத்தனமான கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் வெறும் வில்லத்தனம் மட்டுமின்றி அதில் காமெடியும் கலந்து நடித்து அசத்தியிருக்கிறார். அவர் திறமையான நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதர். இப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்.
ஏற்கனவே 'ஹரிதாஸ், வட்டக்கானல்' போன்ற சில படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்த ஆர்.கே.வரதராஜ், இப்படத்தில் மக்களை கவரும் காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் கதாநாயகன் ராஜ் வர்மா ஏற்கனவே நான் இயக்கிய, 'நான் யார் தெரியுமா' மட்டுமின்றி 'சாலையோரம், நாளை முதல் குடிக்க மாட்டேன்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர்'' என்றார்.
இந்த படத்தை ஜரீன் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் இ.ஜே.நவ்சாத் மற்றும் இயக்குநர் வி.எஸ்.பாலமுருகன் இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் படம் ரிலீசாகிறது.