'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள்
ADDED : 4 days ago
நடிகர் ஆர்யா கைவசம் 'மிஸ்டர் எக்ஸ், ஆனந்தன் காடு, வேட்டுவம்' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. அடுத்ததாக 'சார்பட்டா பரம்பரை' 2ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கிடையே பிரபல மலையாள இயக்குனர் நிகில் முரளி இயக்கத்தில் அவரது 40வது படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. படத்தில் ஆர்யா ஜோடியாக நிகிலா விமல், தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா என இரு நாயகிகள் நடிக்கின்றனர். இருவரும் ஆர்யாவுடன் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு, 'ஆர்யா 40, லோடிங்' என பதிவிட்டுள்ளனர்.