உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்!

தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்!


விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'கர'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்ட தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55வது படத்தில் நடிக்கிறார். சாய்பல்லவி. ஸ்ரீ லீலா ஆகியோர் ஜோடி சேர்ந்துள்ளார்கள்.

இந்த படத்தை அடுத்து தனுஷின் 56வது படத்தை 'லப்பர் பந்து' படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக 'ஏஸ், மதராஸி' படங்களில் நடித்த ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளார். 'உறியடி' விஜயகுமார் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !