மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1090 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1090 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1090 days ago
தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் இணைந்து தெலுங்கில் 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்கள். ராஷ்மிகாவுக்கு கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டியுடன் 2017ம் ஆண்டிலேயே திருமண நிச்சயம் நடந்தது. ஒரு வருடம் கழித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கைவிட்டனர்.
அதன்பின்னர் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா பற்றிய காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி தெலுங்கு திரையுலகத்திலும், மீடியாக்களிலும் வெளிவரும். ஆனால், இருவருமே அதை மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மும்பையிலிருந்து அடுத்தடுத்து இருவரும் மாலத்தீவிற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமாகியுள்ள 'குட் பை' படம் நேற்று வெளியானது. படத்தின் பிரமோஷன்களை முடித்துவிட்டதாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தததாலும் ஓய்விற்காக ராஷ்மிகா மாலத் தீவு சென்றுள்ளாராம். அவருடன் விஜய்யும் சென்றுள்ளதால் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது என்கிறார்கள்.
மாலத் தீவு செல்லும் நட்சத்திரங்கள் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். ராஷ்மிகாவும், விஜய்யும் அப்படி ஜோடியாக ஏதாவது புகைப்படங்களைப் பதிவிட்டால் தான் அவர்களுக்குள் காதல் இருப்பது தெரிய வரும்.
1090 days ago
1090 days ago
1090 days ago