ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கும் ஹன்சிகா!
ADDED : 1341 days ago
வாலு படத்திற்கு பிறகு சிம்பு- ஹன்சிகா இணைந்து நடித்த மஹா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் மெட்ரோ சிரிஷுடன் இணைந்து நடிக்கப் போகிறார் ஹன்சிகா. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த படம் ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மஹா படத்தில் மாறுபட்ட கெட்டப்பில் ஹன்சிகா நடித்திருந்ததால் இந்த படத்திலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.