சினிமாவாகிறது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் வாழ்க்கை
ADDED : 1085 days ago
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் கே.பி.ஹெட்கேவர். இவரது வாழ்க்கை இப்போது சினிமாவாக தயாரிக்கப்படுகிறது. சஞ்சய்ராஜ் கவுரிநந்தன் இயக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற அனுப் ஜலோட்டா நடிக்கிறார். அவருடன், ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல்.நித்தேஷ் குமார் மற்றும் ஜெயானந்த் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
எங்கள் திரைப்படம் ஹெட்கேவரின் வாழ்க்கை பயணம், அவரது போராட்டங்கள் மற்றும் அவரது இயக்கங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும். ஆர்எஸ்எஸ் இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் அது கடுமையான பாதைகளை கடந்து வந்துள்ளது. அதனை பற்றி இந்த படம் பேசும்” என்கிறார் இயக்குனர் சஞ்சய்ராஜ்.