'வாரணாசி' படம் புராணம், தெய்வீகம் கலந்த கலவையாக இருக்கும்! -இயக்குனர் ராஜமவுலி தகவல்
மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'வாரணாசி'. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், வாரணாசி படத்தில் புராணக் கூறுகள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவித்திருக்கிறார்.
அதனால் இந்த வாரணாசி படம் புராண காலத்தின் பயண கருத்துக்கள் மற்றும் தெய்வீகம் ஆகியவை கலந்த கலவையாக உருவாக்கப்படுகிறது. சுமார் 25 நிமிடங்கள் புராண பகுதிகள் முழுமையாக இடம்பெறும். இந்த படத்தின் முதல் பார்வை எப்படி ரசிகர்களை ஈர்த்ததோ அதேபோன்று மொத்த படமும் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி. மேலும், இந்த படத்தில் மகேஷ்பாபு, ருத்ரா என்ற வேடத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் கும்பா என்ற வில்லன் வேடத்திலும் நடிக்கிறார்கள்.