உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வில் அம்பு பட இயக்குனர் மரணம்

வில் அம்பு பட இயக்குனர் மரணம்

வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம், 49, புற்றுநோய் பிரச்னையால் மரணம் அடைந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சிருஷ்டி டாங்கே, சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியான படம் ‛வில் அம்பு'. இந்த படத்தை ரமேஷ் சுப்ரமணியம் இயக்கி இருந்தார். அதன்பின் இவரது இயக்கத்தில் படம் எதுவும் வெளியாகவில்லை. எலும்பு புற்றுநோய் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று (மே 28) மரணம் அடைந்தார்.

நாளை காலை கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் இறுதி சடங்கு நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !