உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியல் நடிகர் அர்னவின் ஜாமீன் மனு நிராகரிப்பு

சீரியல் நடிகர் அர்னவின் ஜாமீன் மனு நிராகரிப்பு

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் அளித்த புகாரின் பெயரில், சீரியல் நடிகர் அர்னவ் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைமிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி அர்னவ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அர்னவ் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு அம்பத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அர்னவின் முன்ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அர்னவ் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !