உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவ., 11ல் வருகிறார் ‛டிரைவர் ஜமுனா'

நவ., 11ல் வருகிறார் ‛டிரைவர் ஜமுனா'

‛காக்க முட்டை' படத்தில் பிரபலமாகி தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிட்சன், சொப்பன சுந்தரி, பர்ஹான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ஒரு சில படங்களில் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் டிரைவர் ஜமுனா.

கின்சிலின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் கால்டாக்ஸி ஓட்டும் பெண்ணாக கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லாக உருவாகி உள்ள இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வந்த நிலையில் தற்போது நவ.,11ல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !