ரஜினி, கமல் தீபாவளி வாழ்த்து
ADDED : 1160 days ago
நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. தீபாவளியையொட்டி நேற்று ரஜினியின் போயஸ் இல்லத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் கூடினர். அப்போது திடீரென என்ட்ரியான ரஜினி, ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து, அவர்களின் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டார்.
நடிகர் கமல், ‛‛எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. ஒளியினால் இருள் அகல்க. மனங்களில் மகிழ்வு பெருகுக. என் தீபாவளி வாழ்த்து'' என தெரிவித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.