மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1070 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1070 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1070 days ago
தீபாவளிக்குப் பிறகு எப்போதுமே படங்களின் வெளியீட்டில் ஒரு தேக்கம் ஏற்படும். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகாது. அதற்குப் பிறகு கிறிஸ்துமஸ் விடுமுறையில்தான் படங்களை வெளியிட பலரும் முன் வருவார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் படங்களின் வெளியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கிடைக்கும் இடைவெளியில் தங்களது படங்களை வெளியிட்டுவிட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு 'சர்தார், பிரின்ஸ்' படங்கள் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. அதற்கு முன் வெளியாகிய 'பொன்னியின் செல்வன், காந்தாரா' படங்கள் குறிப்பிட்ட அளவில் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தீபாவளி வெளியீடுகள் வெளிவந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற, ஒரே ஒரே படம் மட்டுமே வெளியாகி உள்ளது.
அதே சமயம் அடுத்த வாரம் நவம்பர் 4ம் தேதி “லவ் டுடே, காபி வித் காதல், நித்தம் ஒரு வானம்' ஆகிய மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'லவ் டுடே, காபி வித் காதல்' படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் தீபாவளி படங்கள், தீபாவளிக்கு முன்பு வெளிவந்த படங்கள் நவம்பர் 3 வரை தாக்குப் பிடிக்க முடியும். எனவே, நவம்பர் 4 அன்று வெளியாகும் படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கலாம். மேலும், சில படங்கள் அன்றைய போட்டியில் சேரவும் வாய்ப்புண்டு.
1070 days ago
1070 days ago
1070 days ago