தோழியருடன் 'பிகினி'யில் தீபாவளி கொண்டாடிய இலியானா
ADDED : 1117 days ago
ஷங்கர் இயக்கத்தில், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த 'நண்பன்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இலியானா. தெலுங்கு, ஹிந்தியிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிகமான பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடுவார்.
அந்த விதத்தில் தனது தீபாவளி கொண்டாட்டம் பற்றி சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவருடைய பாலிவுட் நண்பர்களான நடிகர் விஹான் சமத், நடிகை அன்யா சிங், இயக்குனர் கரிஷ்மா கோலி அவரது சகோதரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தோழியர்களுடன் பிகினியில் பீச்சில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தனது பதிவுடன் வெளியிட்டுள்ளார். “இந்த தீபாவளி சிறந்த வகையான ஒளியால் என்னைச் சூழ்ந்தது. அது ஆசீர்வதிக்கப்பட்டது என்று தைரியமாகச் சொல்வேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார் இலியானா.