மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1046 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1046 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1046 days ago
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் டுவிட்டர் தளத்தைத்தான் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டுவிட்டர் டிரெண்டிங் என்பதுதான் சினிமா பிரபலங்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் ஒரு 'போதை' ஆக இருக்கிறது. இதனால், மற்ற தளங்களைக் காட்டிலும் டுவிட்டர் தளத்தில்தான் அதிகமான சினிமா ரசிகர்கள் தங்கள் கமெண்ட்டுகளையும், கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள். அதனால், சினிமா பிரபலங்களுக்கும் அதில்தான் அதிக பாலோயர்களைப் பெற விரும்புகிறார்கள்.
தென்னிந்திய நடிகர்களைப் பொறுத்தவரையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 13 மில்லியன் பாலோயர்களைத் தற்போது தொட்டு முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் தமிழ் நடிகரான தனுஷ் 11.1 மில்லியன் பாலோயர்களுடனும், மூன்றாவது இடத்தில் தமிழ் நடிகரான சூர்யா 8.3 மில்லியன் பாலோயர்களுடனும், நான்காவது இடத்தில் கமல்ஹாசன் 7.5 மில்லியன் பாலோயர்களுடனும், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 7.2 மில்லியன் பாலோயர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
தமிழில் அதிக வசூல் நாயகர்கள் என்ற பெயரைப் பெற்ற ரஜினிகாந்த் 6.2 மில்லியன் பாலோயர்களுடனும், விஜய் 4 மில்லியன் பாலோயர்களுடனும் பின் தங்கியுள்ளனர். நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை.
1046 days ago
1046 days ago
1046 days ago