உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெய் பீம்' இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா

'ஜெய் பீம்' இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா

சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தை டிஜே ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை குவித்தது. தற்போது இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு டிஜே ஞானவேலின் இயக்கத்தில் மீண்டும் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !