மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1036 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1036 days ago
தோனி, கபாலி போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்போது முழுநேர ஹிந்தி நடிகையாகிவிட்டார். படங்களை விட வெப்சீரிஸில் அதிகம் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'மோனிகா ஓ மை டார்லிங்' படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் காதலர்கள் மற்றும் கணவன் - மனைவிக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார்.
அதில், “காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் சண்டை வந்தால் மூன்றாவது நபரின் பேச்சை கேட்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளே வரும்போது தான் உறவுகளுக்குள் உள்ள விரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது. நமது வாழ்க்கையில் நமது பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று நமக்கு மட்டுமே தெரியும்” என்கிறார்.
1036 days ago
1036 days ago