விஷ்ணு விஷால் படம் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ரவிதேஜா
ADDED : 1189 days ago
எப்ஐஆர் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படம் கட்டா குஸ்தி. தெலுங்கிலும் மட்டி குஸ்தி என்கிற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இயக்குனர் செல்லா அய்யாவு என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார்.
இந்தப்படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா, விஷ்ணு விஷாலுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ரவிதேஜா. இதற்கு முன்பாக விஷ்ணு விஷால் நடித்த எப்ஐஆர் படத்தை தெலுங்கில் தனது நிறுவனம் மூலமாக ரவிதேஜா வெளியிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.