‛பட்டத்து அரசன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1065 days ago
‛சண்டிவீரன்' படத்தை அடுத்து நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛பட்டத்து அரசன்'. ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்க, ராஜ்கிரண், ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் முதல்பார்வை வெளியிடப்பட்டது. கிராமத்து கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றே பெற்றுவிட்டது. படத்திற்கு சென்சாரில் யு சான்று கிடைத்துள்ளதாகவும், நவ., 25ல் படம் திரைக்கு வருவதாகவும் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.