சென்னையில் நடக்கவுள்ள ‛ஸ்ரீ ஆண்டாள்' நடன நாடக நிகழ்ச்சி
ADDED : 1051 days ago
வரும் சனிக்கிழமை (நவ.,26) மாலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி மெயின் ஹாலில் ‛ஸ்ரீ ஆண்டாள்' என்னும் நடன நாடக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் தயாரிப்பு மற்றும் இசையில், ஆண்டாள் வரதராஜன் எழுதிய பாடலை இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி, நிவாஸ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இவர்களுடன் பி.எஸ்.பி.பி பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து பாடியுள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், ‛ஆண்டாளின் கதையை அழகாக நடனத்தின் மூலம் வெளிப்படுத்த ஆசைப்பட்டோம். ரொம்ப நல்லா வந்திருக்கு' மக்கள் அனைவரும் வந்து இந்த நாட்டிய நாடகத்தை பார்த்து மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்