மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1042 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1042 days ago
மலையாளத்தில் பிரேமம் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த பின்னர், கிட்டத்தட்ட 7 வருடங்களாக தனது அடுத்த படத்தை இயக்காமல் அமைதி காத்து வந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். காமெடி ஆக்ஷன் கலந்து இந்த படம் உருவாகியுள்ளது. பிரேமம் படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அல்போன்ஸ் புத்ரனே கவனித்துள்ளார்.
கடந்த ஓணம் பண்டிகை சமயத்திலேயே இந்த படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதேசமயம் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தாமதம் ஆகிறது என்றும், ரசிகர்களுக்கு நல்ல படைப்பாக பரிமாற வேண்டும் என்பதால் இந்த தாமதத்தை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அல்போன்ஸ் புத்ரன் கூறியிருந்தார். ஆனால் படமாக்கப்பட்ட சில காட்சிகள் அல்போன்ஸ் புத்ரனுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால் மீண்டும் ரீ-ஷூட் செய்ததால் தான் இந்த தாமதம் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக இந்தப்படம் வெளியாகலாம் என யூகமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு முன்கூட்டியே டிசம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது என தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிஸ்டின் ஸ்டீபன் இதுபற்றி கூறும்போது, “திரைப்படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கலாம்.. கடவுளே தயவுசெய்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் இனி எந்த திருப்பங்களும் நேராமல் பார்த்துக் கொள்ளவும்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
1042 days ago
1042 days ago