உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா?
ADDED : 1053 days ago
சமந்தா கதையின் நாயகியாக நடித்த யசோதா படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து வருகிறார். என்றாலும் இந்த அரிய வகை நோயின் பிடியில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை.
இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க உள்ளதாகவும், இதற்காக கேரளா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வந்த நிலையில் இப்போது தென் கொரியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சை எடுக்கப் போகிறாராம் சமந்தா.