ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு
ADDED : 1150 days ago
‛ஆர்ஆர்ஆர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண் தேஜா. இது இவரின் 15வது படமாகும். அவருடன் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
ராம்சரண் அடுத்தப்படியாக ‛உப்பன்னா' பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் அதிரடி ஆக் ஷன் கலந்த விறுவிறுப்பான படமாக உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படம் பிற மொழிகளிலும் வெளியாக உள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.