திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்'
கலையரசன், தீபா பாலு, கஜராஜ், பால சரவணன் உள்பட பலர் நடிக்க, இந்த வாரம் வெளியாக உள்ள படம் 'கொலைச் சேவல்'. ஆணவக் கொலையை மையமாக கொண்டு 'கொலைச் சேவல்' படம் உருவாகி உள்ளது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி சொந்த ஊருக்கு போகிறார்கள். அந்த ஊரில் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சென்று வந்தால் குழந்தை நன்றாக பிறக்கும் என்பது ஐதீகம். இதை தொடர்ந்து திருமணமான ஜோடி அந்த கோவிலுக்கு செல்லும் போது நடைபெறும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
கதைக்களம் முழுக்க காட்டுப் பகுதியில் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அருகில் உள்ள ஜவ்வாது மலையில் முழு படமும் படமாக்கபட்டுள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் பார்க்காத 'கிளைமாக்ஸ்' இந்த படத்தில் உள்ளது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டது. ஆதவ்சந்திரா வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார், என்கிறது படக்குழு.