செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா
சுனைனா நடித்த 'ட்ரிப்', யோகிபாபு, இனியா நடித்த 'துாக்குதுரை' படங்களுக்குபின் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. இயக்குனர் செல்வராகவன் கதைநாயகனாக நடிக்கிறார். இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று இயக்குனரிடம் கேட்டால், ''சேலம் பகுதியில் சாதாரண வியாபாரியாக இருப்பவர் செல்வராகவன். அவர் வாழ்வில் என்ன நடக்கிறது. தனது கிராமத்தை காக்கவும், ஒரு சிறுமியை காக்கவும் அவர் என்ன செய்கிறார் என்ற ரீதியில் கதை நடக்கிறது. சில உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இந்த கதை நகர்கிறது. செல்வராகவன் ஜோடியாக குஷி நடித்துள்ளார். செல்வராகவன் அக்காவாக கவுசல்யாக வருகிறார்.
இந்த கேரக்டருக்காக 10 கிலோவரை செல்வராகவன் எடை குறைத்தார். எந்த கட்டத்திலும் என் விஷயத்தில் தலையிடவில்லை. அவர் படப்பிடிப்பில் சிறந்த நடிகராக மட்டுமே இருந்தார். கவுசல்யா ஓவர் கலராக இருந்ததால், அந்த கிராமத்து பெண்ணாக மாற டல் மேக்கப்போட்டார் கவுசல்யா. பல ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்த கவுசல்யா, இந்த கதைக்காக அக்காவாக மாற சம்மதித்தார். சோஷியல் மெசேஜ் தவிர, கணவன் மனைவி பாசமும் முக்கிய விஷயமாக இருக்கும். சேலத்தை சேர்ந்த பல நடிகர்களை படத்தில் பயன்படுத்தினோம். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டம் இருக்கிறது'' என்கிறார்.