விஜய் ஜெயிக்க, கடவுளை வேண்டுகிறேன் : ஐஸ்வர்யா லட்சுமி
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ‛கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, மாமன், தக் லைப்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புதிய நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவும் கலந்து கொண்டார்.
கடை திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா, ‛‛இந்த நிறுவனத்தின் பிராண்டு தூதராக நான் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். அவர் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. நான் கேரளாவைச் சேர்ந்தவள், எனக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமை இல்லாதது வருத்தமாக உள்ளது.
எனது நண்பர்களில் பலர் விஜய் ரசிகர்களாக உள்ளனர். மக்கள் மீதுள்ள அன்பால் அரசியலுக்கு வந்துள்ளார். தன்னை இந்த நிலைக்கு அமர செய்த மக்களுக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது, அதற்காக கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். மக்களும் அவர் ஜெயிக்கணும் என்று நினைக்கிறார்கள். இருந்தாலும் அதை நான் சொல்ல முடியாது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.