தேவா மறைவு : திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் ‛தேனிசை தென்றல்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவா, 75 காலமானார். அவரது உடல் சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகினர் அஞ்சலி
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், ஒய்ஜி மகேந்திரன், சார்லி, சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிக்குமார், ரமேஷ் கண்ணா, செந்தில், சத்யராஜ், எஸ்வி சேகர், பிரசாந்த், மீனா, சித்ரா லட்சுமணன், குஷ்பு, சுந்தர் சி, ஆர்கே செல்வமணி தலைமையிலான பெப்சி நிர்வாகிகள், தினா, இமான், விஜய் ஆண்டனி, கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, கஸ்தூரி ராஜா, ஷோபா சந்திரசேகர், சினேகன், சுஜாதா மோகன், மாலதி, ஏஎல் விஜய், எஸ்ஏ ராஜ்குமார், ஐஸ்வர்யா ரஜினி, லதா ரஜினிகாந்த், மனோ, சுரேந்தர், வையாபுரி, மன்சூர் அலிகான், மகேந்திரன், நயினார் கோபி, டிகே கலா, ஏ வெங்கடேஷ், சைந்தவி, சரத்குமார், ஆனந்த்ராஜ், ஸ்ரீனிவாஸ், கானா உலகநாதன், ராதாரவி, ராஜ்கபூர், கருணாஸ், ஏஎல் அழகப்பன், ஹிப்ஹாப் ஆதி , அனுராதா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.