உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்'

ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்'


2026ம் ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் தியேட்டர்களில் வெளியான 50க்கும் மேற்பட்ட படங்களில் இரண்டே இரண்டு படங்கள்தான் லாபகரமான படங்களாக அமைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் வெளிவந்த படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில்' படமும், பிப்ரவரி மாதத்தில் வெளியான படங்களில் 'வித் லவ்' படமும் தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்று குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றன.

ஓடிடி தளத்தில் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை விட கூடுதலாக 'வித் லவ்' படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மார்ச் 6ம் தேதி தான் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

கடந்த வாரத்தில் இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் 'வித் லவ்' படம் டாப் 10 பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 11 நாடுகளில் டாப் 10ல் இப்படம் இடம் பெற்றுள்ளது. முதலிடத்தில் 'அக்யூஸ்டு' வெப் சீரிஸ் உள்ளது. இந்திய மொழிப் படங்களில் மற்ற மொழிப் படங்களை விடவும் 'வித் லவ்' படம்தான் டாப்பில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !