‛நீர்ப்பறவை 2' தொடங்கப்படும் - சீனு ராமசாமி அறிவிப்பு
ADDED : 1042 days ago
2012ல் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, பூ ராமு, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛நீர்ப்பறவை'. சீனு ராமசாமி இயக்கி இருந்தார். அப்போது வரவேற்பையும், விஷ்ணு விஷாலுக்கு சினிமாவில் அங்கீகாரத்தையும் தந்த படம் இது. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலைியல் இதன் இரண்டம் பாகம் உருவாகும் என கூறியுள்ளார் சீனுராமசாமி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு : ‛‛நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும். நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப் பெருமக்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார் சீனுராமசாமி.