வாரிசு டிரைலர் எப்போது?
ADDED : 1063 days ago
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் வாரிசு. தமன் இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்காக விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த பாடல் தெலுங்கிலும் இன்று(நவ., 30) வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது. டிச., 25ல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக டிச., 24ல் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.