வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் விபத்து! சண்டை பயிற்சியாளர் பலி
ADDED : 1087 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு படமாக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியின்போது எதிர்பாராத விதமாக ரோப் கயிறு அறுந்ததால் அதில் தொங்கிக்கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.