மருத்துவமனையில் அனுமதியா?: சரத்குமார் தரப்பு விளக்கம்
ADDED : 1130 days ago
பிரபல தமிழ் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக சரத்குமார் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.