மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1022 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1022 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1022 days ago
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள 'அவதார் 2' திரைப்படம் நாளை மறுதினம் டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. உலக அளவில் சுமார் 52,000 ஸ்கிரீன்களில் இப்படம் வெளியாவதன் மூலம் புதிய சாதனையைப் படைக்க உள்ளது. இதற்கு முன்பு 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' படம்தான் அதிக தியேட்டர்களில் வெளியான படமாக இருந்தது. அந்த சாதனையை 'அவதார் 2' முறியடிக்கப் போகிறது. ஆனால், ரஷ்யாவில் மட்டும் இப்படம் வெளியாகவில்லை.
3 மணி நேரம் 12 நிமிடம் ஓட உள்ள இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் 2 டி, 3டி, ஐ மேக்ஸ் 3 டி, 3 டி ஸ்கிரீன் எக்ஸ், 4 டிஎக்ஸ் 30, ஆகிய வடிவங்களில் திரையிடப்பட உள்ளது. 'ஐ மேக்ஸ் 3 டி' வடிவில் படத்தைப் பார்க்கப் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வட அமெரிக்காவில் மட்டும் முன் பதிவின் மூலம் 'அவதார் 2' 38 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் 313 கோடி ரூபாய். முதல் வார இறுதி வசூலாக மட்டும் இப்படம் அமெரிக்காவில் 150 மில்லியன் முதல் 175 மில்லியன் வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். 2009ல் வெளிவந்த 'அவதார்' படத்தின் முதல் பாகம் முதல் வாரத்தில் 77 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்ததாம். அதை விட 'அவதார் 2' இரண்டு மடங்கு வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியாவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த 2022ம் ஆண்டில் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் 'கேஜிஎப் 2' படம் புரிந்த சாதனையை 'அவதார் 2' முறியடித்துள்ளதாம். இந்தியாவில் முதல் வார இறுதி வசூல் சுமார் 40 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
அதே சமயம், படத்தின் பிரிமீயர் காட்சியைப் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி நெகட்டிவ் கருத்துக்களைச் சொல்வதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
1022 days ago
1022 days ago
1022 days ago