ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடித்த காந்தாரா, செல்லோ ஷோ, ஆர்.ஆர்.ஆர்!
ADDED : 1029 days ago
95வது ஆஸ்கர் விருது விழா 2023ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் 92 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட படங்களில் இருந்து 15 படங்கள் இறுதிச்சுற்றுக்கான தரப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அந்த படங்களில் குஜராத்தி படமான செல்லோ ஷோ மற்றும் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் வெளியான காந்தாரா படமும் இடம் பிடித்துள்ளன. மேலும் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்குத்து என்கிற பாடலும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 81 பாடல்கள் போட்டியிட்டு அதில் அடுத்த லெவலுக்கு 15 பாடல்கள் தேர்வாகியுள்ளன. அதில் நாட்டு குத்து பாடலும் ஒன்றாகும்.