20 வருட திரையுலக பயணம் : கணவருடன் கொண்டாடிய ஜெனிலியா
ADDED : 1067 days ago
இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள 'வேத்' என்னும் மராட்டி படத்திலும் நடித்துள்ளார். இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால், இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி மும்பையில் கொண்டாடியுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.