மம்முட்டியின் புதிய படம் அறிவிப்பு : அவரே தயாரித்து நடிக்கிறார்
ADDED : 1001 days ago
மம்முட்டி நடித்து முடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். அடுத்து ஸ்படிகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2023ம் ஆண்டின் முதல் படத்தை அவர் அறிவித்துள்ளார்.
இது மம்முட்டி தயாரிக்கும் 4வது படம். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ராபி வர்க்கீஸ் ராஜ் இயக்குகிறார். படத்திற்கு ஷாபி திரைக்கதை அமைக்கிறார், ரோனி டேவிட் ராஜ் வசனம் எழுதுகிறார். முகமது ரஹில் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இது ஒரு துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் மம்முட்டி கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் கருப்பு சட்டையுடன் கலந்து கொண்டது பற்றிய விவாதங்கள் தொடங்கி உள்ளது.