நெஞ்சு வலியா? : வதந்திக்கு நடிகர் விமல் முற்றுப்புள்ளி
ADDED : 1009 days ago
நடிகர் விமல், நடித்த பசங்க, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விமல் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விமல், தன் சமூக வலைதளப் பக்கத்தில், ‛நலமுடன் படப்பிடிப்பில்' எனப் பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நெஞ்சுவலி என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.