உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சும்மாவே அப்படி பேசுவீங்க! இப்ப பட்டிமன்றம் வேறயா? ரேகா நாயரின் புதிய அவதாரம்

சும்மாவே அப்படி பேசுவீங்க! இப்ப பட்டிமன்றம் வேறயா? ரேகா நாயரின் புதிய அவதாரம்

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சமீப காலங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எழுத்து, டிராவல், பிட்னஸ் அட்வைஸ், மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கிங், மாணவர்களுக்கான ஆலோசனை என எப்போதும் பிசியாக எதையாவது செய்து கொண்டிருக்கும் ரேகா நாயர் தற்போது பட்டிமன்றத்திலும் பேச்சாளராக கலந்து கொள்கிறார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள பட்டிமன்ற நிகழ்வில் ரேகா நாயரும் பேசுகிறார். இதற்காக மக்களை அழைக்கும் வகையில் அழகாக கொங்கு தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் 'நீங்க சும்மாவே சூப்பரா பேசுவீங்க. இப்ப பட்டிமன்ற பேச்சளாராகவும் ஆயிட்டீங்களா' என ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !